காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் யூரேசிய நீர்நாய்கள் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு மீண்டும் தோன்றியுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளில், இந்த இனம் ஆனது முதல்முறையாக நேரடியாகப் பதிவாகி உள்ளது.
1997 ஆம் ஆண்டில், பிரபலமான தால் ஏரியின் உப்பங்கழிகளில் மக்கள் அவற்றைக் கண்டனர்.
உள்ளூரில் வோடூர் என்று அழைக்கப்படும் யூரேசிய நீர்நாய்கள் முஸ்டெலிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதோடு அவை நீர்நிலைச் சூழல்களைப் பகுதியளவு சார்ந்து வாழ்பவையாகும்.
மீன்களை உண்கின்ற இந்த இனம் ஆனது மிகவ வளமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணுவதற்கு இன்றியமையாதது.
IUCN அமைப்பானது 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் யூரேசிய நீர்நாய்களை அதன் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாகப் பட்டியலிட்டது.