TNPSC Thervupettagam

காஷ்மீருக்கான மசோதாக்கள் 2023

December 8 , 2023 226 days 140 0
  • ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • மறுசீரமைப்பு மசோதா வரவிருக்கும் 114 இடங்களைக் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற அவையில் "காஷ்மீரில் குடியேறியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் (PoK) மற்றும் பழங்குடியினருக்கு" இடங்களை ஒதுக்க முயல்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள சட்டமன்றத்தில் ஆரம்பத்தில் 100 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான (PoK) உறுப்பினர்கள் 24 பேர் உள்ளனர்.
  • 1988 ஆம் ஆண்டில், இந்த இடங்கள் 111 ஆக அதிகரிக்கப்பட்டது.
  • இந்த 24 இடங்கள் அவையின் குறைந்தப்பட்ச வருகைக்கான கணக்கீட்டில் பரிசீலிக்கப் படுவதில்லை.
  • இது லடாக்கிற்கான நான்கு இடங்கள் உட்பட மொத்தம் 87 இடங்களில் போட்டியிட வைக்கிறது.
  • 2020 ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, PoK பகுதிக்கான இடங்கள் உட்பட மொத்த இடங்கள் 114 ஆக உயர்ந்தது.
  • சட்டசபைக்கு 5 உறுப்பினர்களை நியமிக்க மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
  • இவர்களில் இருவர் பெண்கள், ஒருவர் காஷ்மீரில் குடியேறியவர் மற்றும் ஒருவர் PoK பகுதியைச் சேர்ந்தவர் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது ஆகும்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (சட்டமன்றத்துடன் கூடியது) மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லாமல்) எனும் இரு ஒன்றியப் பிரதேசங்களாக மறுசீரமைக்க ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 அதிகாரம் வழங்குகிறது.
  • தற்போது முதன்முறையாகப் பழங்குடியினருக்கு 9 உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயல்கிறது.
  • புதிய இடஒதுக்கீடு மசோதாவானது, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், 2004 என்ற சட்டத்தில் உள்ள "நலிந்த மற்றும் பின்தங்கிய வகுப்பினர்" என்ற சொல்லை "பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்று மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்