TNPSC Thervupettagam

கிசான் சம்படா திட்டம்

July 20 , 2017 2727 days 1380 0
  • இந்திய அரசாங்கம் கிசான் சம்படா என்ற புதிய மத்திய துறைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 14 வது இந்திய நிதி ஆணையம் 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டில் உணவுப் பதப்படுத்தும் திட்டங்களை மேம்படுத்துவதற்காக முனையும் அதே நேரத்தில், கிசான் சம்படா திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கிசான் சம்படா திட்டம் என்ற குடையின் கீழ் பின்வரும் திட்டங்கள் அடங்கும்:
    • மாபெரும் உணவுப் பூங்காக்கள்.
    • ஒருங்கிணைந்த குளிர்பதன வசதிகள் மற்றும் மதிப்புக் கூட்டு உள்கட்டமைப்பு
    • உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பதனிட வசதிகளை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கல்.
    • வேளாண் உள்கட்டமைப்பு.
    • உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாத உள்கட்டமைப்பு.
    • மனித வளம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள்.
  • கிசான் சம்படா திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் மாநில பாகுபாடு இல்லாமல் , நாடு முழுவதற்கும் பொருந்தும் .
  • இந்தத் திட்டங்கள் தனியார் துறையுடன் இயங்குகின்றன, மேலும் தொழில் நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு, திட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் மூலப்பொருட்கள் கிடைப்பதன் அடிப்படையில் திட்ட இடம் தேர்வு செய்ய தொழில்முனைவோர்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது.
  • கிசான் சம்படா எனும் இந்த உணவுப் பதப்படுத்தும் துறைக்கான திட்டத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம் (Ministry of Food Processing Industries of India) அறிமுகம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்