TNPSC Thervupettagam

கிசான் திவாஸ் (இந்தியாவில் விவசாயிகள் தினம்) - டிசம்பர் 23

December 24 , 2019 1741 days 497 0
  • தேசிய விவசாயிகள் தினம் அல்லது கிசான் திவாஸ் ஆனது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதியன்று இந்தியாவில் கொண்டாடப் படுகின்றது.
  • இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இந்தத் தினமானது தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • இவர் கிசான் தலைவர் என்றும் அறியப்பட்டார். மேலும் லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தையும் இவர் பின்பற்றினார்.
  • சவுத்ரி சரண் சிங்கின் கடின உழைப்பால் ‘ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா -1952’ என்ற மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
  • ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார & சமூக வளர்ச்சி மற்றும் சமூகத்திற்கு விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்