கணக்கெடுப்புத் தரவு ஆனது, 2020-21 ஆம் ஆண்டில் 61 ஆக இருந்த புல்வாய்களின் எண்ணிக்கையானது 2023-24 ஆம் ஆண்டில் 100 ஆக உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
புள்ளிமான் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, இந்தப் பூங்காவிற்குள் ஒரு பரந்த சூழலியல் மறுசீரமைப்பினைக் குறிக்கிறது.
கிண்டி தேசியப் பூங்காவானது, சென்னை நகரின் மையத்தில் உள்ள சில பாதுகாக்கப் பட்ட பகுதிகளில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது புள்ளிமான் மற்றும் புல்வாய் ஆகிய இரண்டு விலங்குகளுக்கும் இரண்டிற்கும் புகலிடமாக அமைகிறது.
குறிப்பாக புல்வாய் இனங்கள் உயிர்வாழத் திறந்தவெளிப் புல்வெளிகளையே சார்ந்து உள்ளன.
கிண்டி தேசியப் பூங்காவிற்குள் உள்ள நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலப் பகுதி மீட்டெடுக்கப்பட உள்ளது.
போலோ மைதானம் என்று அழைக்கப்படுகின்ற இப் பகுதியானது வெகு நாட்களாக ஊடுருவல் தாவர இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவின் பாதுகாப்பு நிலையைப் பொருட்படுத்தாமல், இது புல்வாய்களின் முக்கியமான வாழ்விடமாக உள்ளது.