கினியா குடியரசின் (Republic of Guinea) அதிபரான அல்பா கொண்டே (Alpha Conde) கினியாவின் புதிய பிரதமராக இப்ராஹிமா கஸ்ஸோரி போபனாவை (Ibrahima Kassory Fofana) அறிவித்துள்ளார்.
கினியாவின் பிரதமராக இருந்து வந்த மமாடி யூவ்லா (Mamady Youla) கடந்த வாரம் தனது அரசுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, கினியாவின் புதிய பிரதமராக முன்னாள் முதலீடு மற்றும் பொது – தனியார் கூட்டிணைவிற்கான அமைச்சர் மற்றும் அதிபரின் விசுவாசியான போபானா நியமிக்கப்பட்டுள்ளார்.
கினியாவானது ஆப்பிரிக்காவின் முன்னணி பாக்ஸைட் உற்பத்தியாளர் நாடாகும். பாக்ஸைட்டானது அலுமினியத்தினை தயாரிக்கப் பயன்படுகின்றது. மேலும் ஆப்பிரிக்க நாடான கினியாவில் குறிப்பிடத்தக்க முக்கியமான இரும்புத்தாது இருப்புகள் உள்ளன.