கினியா நாடானது உறக்க நோய் என்று வெகுவாக அழைக்கப்படும் மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸின் (HAT) கேம்பியன் ஒட்டுண்ணி வழியான பாதிப்பினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என்ற நிலையில் இருந்து வெற்றிகரமாக நீக்கியுள்ளது.
கினியாவில் நிலவி வந்த மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் பாதிப்பின் இந்த ஒரே வடிவம் ஆனது, அந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்ட முதல் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோயாக மாறியுள்ளது.
HAT என்பது பாதிக்கப்பட்ட குருதி உறிஞ்சும் ஈக்கள் கடித்தால் பரவும் ஓர் ஒட்டுண்ணி நோயாகும்.
கினியாவின் இந்த சாதனையானது, டோகோ, பெனின், கோட் டி'ஐவோயர், உகாண்டா, ஈக்குவடோரியல் கினியா, கானா மற்றும் சாட் ஆகிய ஏழு நாடுகளில் இந்த பாதிப்பு ஒழிப்பிற்கான போக்கின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது.