உயர் துல்லியத் தன்மையுடைய கண்டங்களுக்கிடையேயான ஹைப்பர் சோனிக் ஏவுகணையான கின்ஜால் ஏவுகணையை (Kinzhal missile) MiG-31 மீயொலிவேக இடைமறிப்பு ஜெட் விமானத்திலிருந்து ஏவி ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ரஷ்யாவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்ஜ்ஹால் ஏவுகணையும் ஒன்றாகும்.
ஒலியைக் காட்டிலும் 10 மடங்கு வேகமாக செல்லக்கூடியது இந்த ஏவுகணை.
இதன் இலக்கு வரம்பு 2000 கிலோ மீட்டர்களாகும்.
கின்ஜால் ஏவுகணை அமைப்பு பொருத்தப்பட்ட முதல் வான் படையானது ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டது.
தகவல் துளிகள்
ஒலியின் வேக அலகு - மாக் (Mach)
ஹைப்பெர்சொனிக் வேகம் (Hyper Sonic) - ஐந்து மாக்-ஐ விட அதிகமான அலகுடைய எவ்வேகமும் அதிமீயோலி வேகம் எனப்படும்.
குறையொலி வேகம் (Sub Sonic) - ஒலியின் வேகத்தை விட குறைவான எவ்வேகமும் குறையொலி வேகம் (Sub-sonic) எனப்படும்.
மீயொலி வேகம் - சூப்பர்சொனிக் (super Sonic) - ஒரு மாக்-ஐ விட அதிகமான அலகுடைய எவ்வேகமும் மீயொலி வேகம் எனப்படும்.
சீர்வேக ஏவுகணை (Cruise Missile) - வான் வழிப்பயணத்தின் பெரும் பகுதியை வளிமண்டலத்தினுள்ளே கொண்டு ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் ஓர் வழிகாட்டு அமைப்புடைய ஏவுகணையே சீர்வேக ஏவுகணை எனப்படும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic Missile) - வான் வழிப்பயணத்தின் பெரும்பகுதியை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்ட, பெருந்தொலைவுப் பயணப்பாதை உடைய, கண்டங்களுக்கு இடையே வழிகாட்டும் அமைப்புடைய ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனப்படும்.