TNPSC Thervupettagam

கின்ஜால் ஏவுகணை

March 17 , 2018 2317 days 794 0
  • உயர் துல்லியத் தன்மையுடைய கண்டங்களுக்கிடையேயான ஹைப்பர் சோனிக் ஏவுகணையான கின்ஜால் ஏவுகணையை (Kinzhal missile) MiG-31 மீயொலிவேக இடைமறிப்பு ஜெட் விமானத்திலிருந்து  ஏவி ரஷ்யா  வெற்றிகரமாக  சோதனை செய்துள்ளது.
  • ரஷ்யாவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்ஜ்ஹால் ஏவுகணையும் ஒன்றாகும்.
  • ஒலியைக் காட்டிலும் 10 மடங்கு வேகமாக செல்லக்கூடியது இந்த ஏவுகணை.
  • இதன் இலக்கு வரம்பு 2000 கிலோ மீட்டர்களாகும்.
  • கின்ஜால் ஏவுகணை அமைப்பு பொருத்தப்பட்ட முதல் வான் படையானது ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டது.

தகவல் துளிகள்

  • ஒலியின் வேக அலகு - மாக் (Mach)
  • ஹைப்பெர்சொனிக் வேகம் (Hyper Sonic) - ஐந்து மாக்-ஐ விட அதிகமான அலகுடைய  எவ்வேகமும் அதிமீயோலி வேகம் எனப்படும்.
  • குறையொலி வேகம் (Sub Sonic) - ஒலியின் வேகத்தை விட குறைவான எவ்வேகமும் குறையொலி வேகம் (Sub-sonic) எனப்படும்.
  • மீயொலி வேகம் - சூப்பர்சொனிக் (super Sonic) - ஒரு மாக்-ஐ விட அதிகமான அலகுடைய  எவ்வேகமும் மீயொலி வேகம் எனப்படும்.
  • சீர்வேக ஏவுகணை (Cruise Missile) - வான் வழிப்பயணத்தின் பெரும் பகுதியை வளிமண்டலத்தினுள்ளே கொண்டு ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் ஓர் வழிகாட்டு அமைப்புடைய ஏவுகணையே சீர்வேக ஏவுகணை எனப்படும்.
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic Missile) - வான் வழிப்பயணத்தின் பெரும்பகுதியை வளிமண்டலத்திற்கு வெளியே கொண்ட, பெருந்தொலைவுப் பயணப்பாதை உடைய,  கண்டங்களுக்கு இடையே வழிகாட்டும் அமைப்புடைய ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்