TNPSC Thervupettagam

கிம் ஜோங் உன் - சீனப் பயணம்

March 30 , 2018 2304 days 689 0
  • சீன அதிபர் ஜீ ஜின்பிங் (Xi Jinping) உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க  சந்திப்பிற்குப் பிறகு வடகொரிய அதிபரான கிம் ஜோங் உன் (Kim Jong-un)  தன்னுடைய அணு ஆயுதத் தொடரலை கைவிடுவதாகவும் (Denuclearise), அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
  • இந்தப் பயணமானது 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங்-உன் அதிபராக பதவியேற்றதிலிருந்து  வடகொரியாவிற்கு வெளியே அவர் மேற்கொள்ளும்  முதல் அறியப்பட்ட பயணமாகும்.
  • சீனா பாரம்பரியமாக வடகொரியாவின் இரகசிய நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த நட்புறவானது வட கொரியாவினுடைய  அணு ஆயுத மேம்படுத்து செயல்பாடுகளின் தொடரலால் தேய்ந்தது.
  • வட கொரியாவினுடைய இச்செயல்களுக்கு  பதிலெதிர்ப்பாக ஐ.நா.வினுடைய வட கொரியா மீதான  தடைகளை (UN sanctions)  சீனா ஆமோதித்தது.
  • கிம் ஜோங் உன்-னிற்கு முந்தைய ஆட்சியாளர்களான, முறையே கிம்ஜோங் உன்-னின் தாத்தா மற்றும் தந்தையான கிம் இல்-சுங்  (Kim Il-sung)  மற்றும் கிம் ஜோங்-இல் (Kim Jong-il) ஆகிய  இருவரும் அணு ஆயுதங்களை தொடரப் போவதில்லை என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இருவரும் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கானத் திட்டங்களைத் தொடர்ந்தனர். இது 2006  ஆம் ஆண்டு  கிம் ஜோங்-இல் தலைமையின் கீழான  வட கொரியாவின்  முதல் அணு சோதனையாக  உச்சத்தை அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்