சீன அதிபர் ஜீ ஜின்பிங் (Xi Jinping) உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பிற்குப் பிறகு வடகொரிய அதிபரான கிம் ஜோங் உன் (Kim Jong-un) தன்னுடைய அணு ஆயுதத் தொடரலை கைவிடுவதாகவும் (Denuclearise), அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்தப் பயணமானது 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங்-உன் அதிபராக பதவியேற்றதிலிருந்து வடகொரியாவிற்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் அறியப்பட்ட பயணமாகும்.
சீனா பாரம்பரியமாக வடகொரியாவின் இரகசிய நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த நட்புறவானது வட கொரியாவினுடைய அணு ஆயுத மேம்படுத்து செயல்பாடுகளின் தொடரலால் தேய்ந்தது.
வட கொரியாவினுடைய இச்செயல்களுக்கு பதிலெதிர்ப்பாக ஐ.நா.வினுடைய வட கொரியா மீதான தடைகளை (UN sanctions) சீனா ஆமோதித்தது.
கிம் ஜோங் உன்-னிற்கு முந்தைய ஆட்சியாளர்களான, முறையே கிம்ஜோங் உன்-னின் தாத்தா மற்றும் தந்தையான கிம் இல்-சுங் (Kim Il-sung) மற்றும் கிம் ஜோங்-இல் (Kim Jong-il) ஆகிய இருவரும் அணு ஆயுதங்களை தொடரப் போவதில்லை என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இருவரும் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கானத் திட்டங்களைத் தொடர்ந்தனர். இது 2006 ஆம் ஆண்டு கிம் ஜோங்-இல் தலைமையின் கீழான வட கொரியாவின் முதல் அணு சோதனையாக உச்சத்தை அடைந்தது.