TNPSC Thervupettagam

கிம்பர்லி செயல்முறை

June 16 , 2019 1895 days 621 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 17 முதல் ஜுன் 21 வரை கிம்பர்லி செயல்முறையின் கூட்டத் தொடர் சந்திப்பானது இந்தியாவினால் மும்பையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • கிம்பர்லி செயல்முறை என்பது ஒழுங்கற்ற வைரங்களின் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு சர்வதேச சான்றளிப்புத் திட்டமாகும். இது பிரச்சினையை ஏற்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டும் வைரங்களின் வர்த்தகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (KPCS - Kimberley Process Certification Scheme) தலைவராக இந்தியா உள்ளது.
  • வன்முறைக்கான அல்லது இரத்த வைரங்கள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்துவதற்காகவும் கிளர்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காகவும் ஆப்பிரிக்காவில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒழுங்கற்ற வைரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்