TNPSC Thervupettagam

கியாசனூர் வன நோய் 2025

April 18 , 2025 16 hrs 0 min 43 0
  • "குரங்கு காய்ச்சல்" என்றும் அழைக்கப்படும் கியாசனூர் வன நோய் (KFD) மீதான பாதிப்பானது கர்நாடகாவில் அதிகரித்து வருகிறது.
  • ஒரு உண்ணி மூலம் பரவும் இந்த வைரஸ் நோய் ஆனது, வனப் பகுதிகளிலும் அதைச் சுற்றியும் வாழும் மக்களுக்கு கடுமையான உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
  • KFD என்பது ஃபிளாவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த கியாசனூர் வன நோய் வைரஸ் (KFDV) காரணமாக ஏற்படும் வைரஸ் இரத்தக்கசிவு காய்ச்சல் ஆகும்.
  • இது முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் கியாசனூர் பகுதியில் உள்ள ஒரு காட்டில் கண்டறியப் பட்டது.
  • மிக முதன்மையாக பாதிக்கப்பட்ட உண்ணி, குறிப்பாக ஹீமாபிசாலிஸ் ஸ்பினிகேரா கடிப்பதன் மூலம் மனிதர்கள், பாதிக்கப்படுகின்றனர்.
  • சிறிய பாலூட்டிகள், குரங்குகள் மற்றும் பல உண்ணிகள் உள்ள வனச் சுற்றுச்சூழல் அமைப்புகளில் இந்த வைரஸ் காணப்படுகிறது.
  • மனிதர்கள் இந்த நோய்களைக் கடத்தும் கிருமிகளால் மிகத் தற்செயலாகப் பாதிக்கப் படுவதால் நோய் பரப்புதல் சுழற்சியில் அவர்கள்பங்கு வகிப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்