பொதுவாக குரங்குக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் வன நோய் (KFD) பாதிப்புடன் கர்நாடகா மாநிலம் போராடி வருகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல், மாநிலத்தில் 49 குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஃபிளவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கியாசனூர் வன நோய் வைரஸால் (KFDV) குரங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த வைரஸ் முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் கியாசனூர் வனப் பகுதியில் ஒரு நோய்வாய்ப்பட்டக் குரங்கிலிருந்து கண்டறியப்பட்டது.
முதன்மையாக ஒட்டு உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்கு, குறிப்பாக நோய் வாய்ப்பட்ட அல்லது சமீபத்தில் இந்தப் பாதிப்பினால் உயிரிழந்த குரங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவியதற்கான எந்தவொருப் பதிவும் தற்போது வரையில் இல்லை.