கியூபாவின் தேசிய காங்கிரசானது, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனலின் பதவிக் காலத்தினை மேலும் ஐந்தாண்டுக்கு நீட்டித்துள்ளது.
ரௌல் காஸ்ட்ரோவினையடுத்து 2018 ஆம் ஆண்டில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், 2021 ஆம் ஆண்டில் அக்கட்சியின் முதல் செயலாளராகவும் டயஸ்-கேனல் பதவியேற்றார்.
1959 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு பிறந்து, இந்த இரண்டு முக்கியப் பதவிகளையும் வகித்த முதல் காஸ்ட்ரோ வழி சாராத நபர் இவரே ஆவார்.
சமீபத்திய ஆண்டுகளில், கியூபாவின் பொருளாதாரம் சரிந்துள்ளதோடு, தொற்றுநோய் தாக்குதலுக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11% அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பணவீக்கம் அதிகாரப்பூர்வ விகிதத்தில் 40% ஆக இருந்தது.