TNPSC Thervupettagam

கிரகத்தின் நிலைத்தன்மை குறித்த கண்ணோட்ட உச்சி மாநாடு

June 4 , 2024 172 days 297 0
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான (CPSEs) முதலாவது 2024 ஆம் ஆண்டு கிரகத்தின் நிலைத்தன்மை குறித்த கண்ணோட்ட உச்சி மாநாடு & விருதுகள் கோவா மாநில அரசு சமீபத்தில் நடத்தியது.
  • விருதுகள் நான்கு முக்கியப் பிரிவுகளில் வழங்கப்பட்டது:
    • நிலையான ஆளுகையில் வாகையர்,
    • பெருநிறுவனப் பொறுப்பு பிரிவில் வாகையர்,
    • சுழற்சி முறை வாகையர், மற்றும்
    • பருவநிலை நடவடிக்கையில் வாகையர்.
  • தொகுப்பாசிரியர் தேர்வுப் பிரிவில் (எடிட்டர்ஸ் சாய்ஸ்) உள்ள நிலைத்தன்மை வாகையர்கள் விருதுகளானது, நிறுவன மற்றும் தனிநபர் பிரிவுகளில் மகத்தானப் பங்காற்றிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
  • தனிநபர் பிரிவில், இந்தியன் பொட்டாஷ்  லிமிடெட் நிறுவனத்தின் டாக்டர். P.S. கஹ்லாட் மற்றும் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவர் பேராசிரியர் ரிந்து பானர்ஜி ஆகியோரின் பங்களிப்பிற்காக விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்