பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL-Coal India Limited), வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக, சாலை வழியிலான நிலக்கரி விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற கிரஹக் சதக் கோய்லா விட்டரான் (Grahak Sadak Koyla Vitaran) செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் செயலியானது நிலக்கரியை ஏற்றுதல் மற்றும் சாலை வழியிலான விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
இந்தச் செயலியானது, அனுப்புகைகள் (dispatch) எல்லாம் “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை” (First in First Out-FIFO) என்னும் நேர்மையான கொள்கை அடிப்படையில் நடைபெறுகிறதா என பயனாளர்கள் கண்காணித்திட உதவும்.