TNPSC Thervupettagam

கிரந்தம் கல்வெட்டுகள் – காங்கேயம்

January 27 , 2024 174 days 279 0
  • 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கிரந்தம்’ மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மொழிக் கல்வெட்டுகள் ஆகியவை காங்கேயம் அருகே அமைந்த பழஞ்சேர்வழி கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இது வட இந்திய மொழியை எழுதுவதற்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கிரந்த வகை’ எழுத்து கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சொற்கள், இந்த ‘மந்திரக்' கல்லை முற்காலத்தில் மக்கள் நோய்களைக் குணப்படுத்துவதற்காக வழிபட்டனர் என்பதைக் குறிக்கிறது.
  • விஷ்ணு கோவிலில் நந்தா (நிரந்தர) விளக்கு ஏற்றுவதற்கு நான்கு ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டதை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு விவரிக்கிறது.
  • இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு குயவர் வேயும் ஒவ்வொரு சக்கரத்திற்கும் நான்கு ரூபாய் வரியாக விதிக்கப்படும்.
  • மேலும் சந்திரன் இருக்கும் வரை விளக்கு ஏற்றுவது தொடரப்படும் என இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்