TNPSC Thervupettagam
September 23 , 2021 1066 days 678 0
  • கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் 2021-ம் ஆண்டுக்கான கி.ரா. விருது பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் நவீன இலக்கியத்தின் மாய யதார்த்தவாத கதை சொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் கோணங்கி கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.
  • கரிசல் இலக்கிய பிதாமகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும், ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது.
  • இந்த கி.ரா. விருதை சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது.
  • கடந்த 5 ஆண்டுகளாக கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் சிறந்த படைப்பாளரைத் தேர்வு செய்து ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீரா விருது, புதுமைப்பித்தன் விருது, சிறந்த அரசு நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் விருது, சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்