ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தின் தக்காண தீபகற்ப உயிரிப் புவியியல் மண்டலத்தில் மண்ணில் வாழும் உருளைப் புழு இனத்தை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விலங்கியல் மற்றும் வகைப்பிரித்தல் என்ற ஆராய்ச்சிக்கு இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் (ZSI) தலைவர் டாக்டர் த்ரிதி பானர்ஜியின் மிகப்பெரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, கிராசோலாபியம் த்ரிட்டியே என்ற இனத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் ஒன்பது இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, உலகளவில் அறியப்பட்ட கிராசோலாபியம் வகை உயிரினங்களின் மொத்த எண்ணிக்கையை 39 ஆக உயர்த்துகிறது.
இந்த நுண்ணிய உயிரினங்கள் ஆனது, மண் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவுவதோடு, ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் கரிமப் பொருள் சிதைவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.