TNPSC Thervupettagam

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது

July 17 , 2023 351 days 246 0
  • இந்தியப் பிரதமர் அவர்களுக்கு பிரான்சு நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • லீஜியன் ஆஃப் ஹானர் என்பது அனைத்து நடவடிக்கைகளிலும் மிகவும் சிறந்து விளங்கும் தகுதி மிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் பிரான்சு நாட்டின் மிக உயரிய விருதாகும்.
  • இது இரண்டு நூற்றாண்டுகளாக முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது.
  • இது முன்னாள் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் அவர்களால் 1802 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • லீஜியன் ஆஃப் ஹானர் ஐந்து நிலைகளாக (கடைநிலை முதல் மேல்நிலை வரை) நைட், அலுவலர், கமாண்டர், கிராண்ட் ஆபீசர் மற்றும் கிராண்ட் கிராஸ் ஆகிய வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது.
  • இதில் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு மேல்நிலை கௌரவ விருதானது வழங்கப் பட்டு உள்ளது.
  • நெல்சன் மண்டேலா, கிங் சார்லஸ், ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இந்தக் கௌரவ விருதினைப் பெற்ற பிற நபர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்