சதுரங்க கிராண்ட்மாஸ்டர் தொம்மராஜு குகேஷ் தற்போது இந்தியாவின் முன்னணிச் சதுரங்க வீரராக மாறியுள்ளார்.
தினசரி மதிப்பீடுகளில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ், அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஒரு பெரிய ஒற்றை ஆட்ட நீக்கப் போட்டியான FIDE சதுரங்க உலகக் கோப்பைப் போட்டியின் மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றதையடுத்து இவர் இந்த முக்கியப் பெருமையினை அடைந்துள்ளார்.
ஆனந்த், கடந்த 36 ஆண்டுகளாக இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரராகத் திகழ்ந்து வருகிறார்.