மாஸ்டர் கார்டு மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் (United States Agency for International Development-USAID) ஆகியவை “கிரானா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இந்தத் திட்டமானது பெண் தொழில்முனைவோர்களுக்கான வருவாய் அதிகரிப்பு, டிஜிட்டல் பணவழங்கீடுகள் மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தை விரிவுபடுத்தல் ஆகியவற்றிற்காகப் பணியாற்ற இருக்கின்றது.
இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர், லக்னோ, மற்றும் வாரணாசி போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் செயல்படுத்தப்படும் ஒரு 2 ஆண்டு காலத் திட்டம் ஆகும்.
இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
மேலும், இந்தியாவில் உத்தரப் பிரதேசமானது அதிக எண்ணிக்கையிலான எம்எஸ்எம்இ (MSME) வகை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
USAID என்பது சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் என்பதைக் குறிக்கின்றது.
இது அயல்நாட்டு உதவி மற்றும் மேம்பாட்டு உதவி ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மிக்க ஒரு தனிச்சுதந்திர நிறுவனமாகும்.