தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் விளைந்த காப்புரிமை பெற்ற “கிராம அரிசியினை” ஒரு தொடக்க நிறுவனமானது விமானம் மற்றும் கப்பல் வழியாக கானா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி (14.5 டன்) செய்துள்ளது.
அந்த தொடக்க நிறுவனத்தின் பெயர் உதயா வேளாண் பண்ணை என்பதாகும்.
புரதம், நார்ச்சத்து மற்றும் பல விதமான தாதுக்கள் நிறைந்த இந்த கிராம அரிசி தஞ்சை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப் படுகிறது.