மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் (N. Biren Singh) மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோம்லாகோங் கிராமப் பஞ்சாயத்தில் “கிராமங்களுக்குச் செல்லுதல்” (Go to Village) என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டமானது மாநிலம் முழுவதும், மணிப்பூரின் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 60 கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெறத் தகுதியான பயனாளிகளினை அடையாளம் காணவும், அவர்களை நேரடியாக சென்று அடைவதில் (reach out) அரசு அலுவலர்களின் நேரடி செயல் ஈடுபாட்டை (physical involvement) உறுதி செய்வதற்காகவும் மணிப்பூர் மாநிலத்தின் மாவட்டங்களில் அமைந்துள்ள வெவ்வேறு கிராமங்களை அரசு அதிகாரிகள் சென்று காணுவதற்கான தினமாக செவ்வாய் கிழமை தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் அரசானது அரசுத் திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகளை (eligible and deserving beneficiaries) அடையாளம் காணும். மேலும் அவர்களின் வசிப்பிட அளவிலேயே அரசுச் சேவைகளை வழங்கும்.