TNPSC Thervupettagam

கிராமப்புற இளையோர் வேலைவாய்ப்பு அறிக்கை – 2024

August 14 , 2024 101 days 184 0
  • இந்தியாவின் பிரதான வருமான மூலத்தில் கிராமப்புற இளையோர்களில் சுமார் பாதி எண்ணிக்கையிலானோர் வேளாண் பொருட்களின் விற்பனை செய்வதன் மூலமே ஈட்டுகின்றனர்.
  • அதைத் தொடர்ந்து தினசரி கூலி பெறும் வேலை மற்றும் சில்லறை அல்லது மொத்த வியாபாரம் ஆகியவற்றின் மூலம் ஈட்டுகின்றனர்.
  • தற்போது பணியாளர் வளத்தில் பங்கு பெற்றுள்ளவர்களில் பெரும்பான்மையானோர் (70% - 85%) தங்களது வேலையில் மாற்றத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
  • இந்தக் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட ஆண்களில் பெரும்பான்மையானோர் ஓட்டுநர் அல்லது மின்னியல் வல்லுநர் வேலைகளை செய்ய விரும்புவதாகப் பதிலளித்து உள்ளனர்.
  • இந்தக் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானோர் தையல் (64.6%) மற்றும் அழகியல் (23%) சார்ந்த வேலைகளை செய்ய விரும்புவதாகப் பதில் அளித்துள்ளனர்.
  • தற்போது சொந்தமாக தொழில் செய்து வரும் 55% ஆண்களும், 40% பெண்களும் சம்பளம் பெறும் வேலைக்கு மாற விரும்புகின்றனர்.
  • வருமானம் ஆனது 20-30 சதவீதம் குறைவாக இருந்தாலும், 60 சதவீதத்துக்கும் மேலான ஆண்களும், 70 சதவீத பெண்களும் தங்கள் கிராமங்களில் அல்லது அருகில் வேலை வாய்ப்பினைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்