கிராமீன் கடன் மதிப்பு என்பது சுய உதவிக் குழுக்களின் (SHGs) உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் கடன் தேவைகளுக்காக உருவாக்கப்பட உள்ள ஒரு கட்டமைப்பாகும்.
பொதுத்துறை வங்கிகள் ஆனது இந்த 'கிராமீன் கடன் மதிப்புக் குறியீடு' கட்டமைப்பை உருவாக்க உள்ளன.
சுய உதவிக் குழுக்களில் பெண்கள் பெற்ற கடன் மதிப்பு அறிவிக்கப்பட்டால், அவர்கள் வங்கிகளிடமிருந்து அதிகக் கடன்களை எளிதாகப் பெற முடியும்.
கிராமப்புறங்களில் கடன் வாங்குபவர்கள் குறித்த மிகவும் துல்லியமான மதிப்பீட்டை வழங்குவதன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் ஒரு நெறியை மேம்படுத்தச் செய்வதையும் மோசடியைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சிறு கடன்களை வலுப்படுத்தும், நிதி உள்ளடக்கத்தினை அதிகரிக்கும் மற்றும் வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் MSME நிறுவனங்கள் போன்றப் பல்வேறு துறைகளுக்கு ஆதரவளிக்கும்.