விவசாயிகளினுடைய வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டு புதுதில்லியில் 3 நாள் வருடாந்திர கிரிஷி உன்னதி மேளா நடைபெற்றுள்ளது.
2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே இக்கண்காட்சியின் கருப் பொருளாகும்.
விவசாயிகளிடையே வேளாண்மை மற்றும் வேளாண்சார் துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன சமீபத்திய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கிரிஷி சன்னதி மேளாவின் நோக்கமாகும்.
மேலும் இக்கண்காட்சியின் போது பிரதமர் இயற்கை வேளாண்மைக்கான இணைய வாயில் ஒன்றை தொடங்கி வைத்தார். மேலும் 25 கிரிஷி விக்யான் கேந்த்ரா மையங்களுக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது வேளாண்மையில் முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிரிஷி கர்மான் விருதையும் (Krishi Karman Award), பண்டித தீன் தயாள் உபத்யா கிரிஷி விக்யான் புரோத்சஹான் புரஸ்கர் விருதினையும் (Pandit Deen Dayal Upadhaya Krishi Vigyan Protsahan Puraskar) பிரதமர் வழங்கினார்.