மகாராஷ்டிராவில் ஜூலை 1 அன்று வேளாண்மை தினம் (அ) கிரிஷி தின் கொண்டாடப்பட்டது.
இந்த தினமானது மகாராஷ்டிராவின் பசுமைப் புரட்சியின் தந்தை வசந்தரோ நாயக்கை நினைவு கூறுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது வசந்தரோ நாயக்கின் பிறந்த நாளாகும்.
வசந்தரோ நாயக் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1963 முதல் 1975 வரை மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
இது வரை மகாராஷ்ட்ராவில் நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவரேயாவார்.