கிரிஷி முடிவெடுத்தல் செயல்முறைக்கான ஆதரவு வழங்கீட்டு அமைப்பு
August 25 , 2024
93 days
121
- மத்திய அரசானது கிரிஷி முடிவெடுத்தல் செயல்முறைக்கான ஆதரவு வழங்கீட்டு அமைப்பினை (krishi-DSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது இந்திய வேளாண்மைக்கான தனித்துவமான புவிசார் தளமாகும்.
- இது வயல்கள், மண், வானிலை, நீர் நிலைகள் மற்றும் பயிர் நிலைமைகள் பற்றிய எந்த நேரத்திலும் எப்போதும் அணுகக் கூடிய வகையிலான விரிவான தரவை வழங்குகிறது.
- krishi-DSS மண்ணின் ஈரப்பதம், பயிர் நிலைமைகள் மற்றும் வறட்சிக் கண்காணிப்பு பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்குகிறது.
- இது மண் வளம் பற்றிய விரிவான தரவுகளுடன் கூடிய "ஒரு நாடு-ஒரு மண் தகவல் அமைப்பு" என்பதினைக் கொண்டுள்ளது.
- இந்தத் தளம் ஆனது பயிர்ச் சாகுபடி முறைகளை ஆய்வு செய்யவும், இலக்கு சார்ந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுகிறது.
Post Views:
121