ஐந்து ஐரோப்பிய துருவப் பகுதி நாடுகளில் அதிக வெப்பத்தைக் கக்கும் அனல் காற்றானது பதிவாகி இருக்கின்றது.
இது ஆர்க்டிக் பகுதியில் பனி உருகுதலைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மேலும் மிகப்பெரிய பனிக்கட்டி இழப்புகளையும் இது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
கிரீன்லாந்தில் அதிக வெப்பத்தின் (21ºC) காரணமாக ஜூலை 31ம் தேதி அன்று மட்டும் 11 பில்லியன் டன்கள் எடைக்கும் அதிகமான பனியானது அதன் மேற்பரப்பு உருகுதலின் காரணமாக கடலினிற்குள் மூழ்கடிக்கப்பட்டது.
இது ஒன்றே உலகக் கடல் மட்டங்களின் அளவை 0.1 மில்லிமீட்டர் அளவிற்கு நிரந்தரமாக உயர்த்தும்.
ஜூலை மாதத்தில் உருகிய பனிக்கட்டிகள் மட்டும் உலகக் கடல் மட்டத்தில் 0.5 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் மட்ட அதிகரிப்பிற்குக் காரணமாகியுள்ளது.
தனது பரப்பில் 82 சதவிகிதத்தை பனியால் நிரப்பியவாறு உள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் இடைப்பட்ட பகுதியில் பகுதியளவு தன்னாட்சியுடைய டென்மார்க் நாட்டின் பரப்பாகும்.