முதுபெரும் நடிகர், திரைப்பட இயக்குநர், வலதுசாரிக் கொள்கைகளின் விமர்சகர், கன்னட எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரான கிரீஷ் கர்னாட் (1938-2019) காலமானார்.
நாகமண்டலா, யயாதி மற்றும் துக்ளக் ஆகியவை இவரது சில புகழ்பெற்றப் படைப்புகளாகும்.
இவர் 1974 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை சங்கீத நாடக நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
இவருக்கு பத்ம ஸ்ரீ (1974), பத்ம பூசன் (1992), இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடம் (1998) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.