TNPSC Thervupettagam

கிருஷி கல்யாண் அபியான்

June 8 , 2018 2366 days 826 0
  • 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையோடு பொருந்திப் போகும் வகையில் மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 2018ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையில் கிருஷி கல்யாண் அபியான் என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.
  • இந்த திட்டத்தின் நோக்கம் எவ்வாறு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக அவர்களது விவசாய தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டுவதற்காக உதவி செய்யவும், துணை புரியவும் ஆலோசனை கூறவும் எண்ணும் திட்டமாகும்.
  • உயர் லட்சிய மாவட்டங்கள் (Aspirational Districts) ஒவ்வொன்றிலும் 1000 பேர்களுக்கும் அதிகமாக உள்ள 25 கிராமங்களில் கிருஷி கல்யாண் திட்டம் அமல்படுத்தப்படும். இந்த கிராமங்கள் நிதி ஆயோக்கின் ஆலோசனையின் பேரில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் அடையாளம் காணப்படும்.
  • இந்த மாவட்டங்களில் 1000 பேர்களுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஆனால் 25 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாக கிராமங்கள் இருக்கும் சமயத்தில் அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்படும்.
  • விவசாய அறிவியல் மையங்கள் என்று அழைக்கப்படும் கிருஷி விக்யான் கேந்திராக்கள் இத்திட்டத்தை ஒருங்கிணைந்து நிறைவேற்றிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்