இஸ்லாமிய பெரும்பான்மை நாடான பாகிஸ்தானின் செனட் அவைக்கு இரண்டாவது பெண் செனட் உறுப்பினராக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் (PPP-Pakistan People’s Party) சேர்ந்த ரத்னா பகவன்தாஸ் சாவ்லா மட்டுமே பாகிஸ்தான் செனட்டின் ஒரே இந்து பெண் உறுப்பினராக இருந்து வருகிறார்.
பாகிஸ்தானின் செனட் அவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பாகிஸ்தானிய தலித் சமூகப் பெண் கிருஷ்ணா குமாரி கோலி ஆவார்.
சிந்து சட்டமன்றப் பேரவையிலிருந்து செனட் அவைக்கான சிறுபான்மையினர் இடத்தில் ஆளும் கட்சியான PPPஆல் நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரியின் ஆவணங்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அட்டவணை சாதிகள் அவசரச் சட்டம் 1957-ன் அட்டவணை எண்-23ல் கிருஷ்ண குமாரி கோலியின் சாதி குறிப்பிடப்பட்டுள்ளது.