TNPSC Thervupettagam
May 11 , 2018 2391 days 754 0
  • பிஜியின் முன்னாள் பிரதமரான, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மகேந்திர சௌத்ரி, இந்திய வம்சாவழியினருக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டும் விதமாக வி.கே. கிருஷ்ண மேனன் விருதினைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த விருது வி.கே. கிருஷ்ண மேனன் நிறுவன இயக்குநர் சிரியாக் மப்பிரயில் என்பவரால் அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனம், லண்டனில் உள்ள நேரு மையத்தில் மேனனது 122-வது பிறந்த தின விழாவை கொண்டாடியது.
  • பிஜி தொழிலாளர் கட்சியின் தலைவர் சௌத்ரி ஆவார். முன்னாள் தொழிற்சங்கத் தலைவரான சௌத்ரி 1999-ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி முதல் இந்திய பிஜியின் பிரதமராக அவர் பொறுப்பேற்றார். ஆனால் சரியாக ஒரு வருடத்திலேயே அவரது ஆட்சி புரட்சியின் மூலமாக கவிழ்க்கப்பட்டது. முதல் இந்திய-பிஜியன் பிரதமர் இவரே ஆவார்.
  • வி.கே. கிருஷ்ண மேனன் நிறுவனம் 2006-ஆம் ஆண்டில் வி.கே. மேனனது வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றி நினைவு கூர்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்