குடும்ப நிறுவனங்களை கொண்டிருக்கும் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவானது, 839 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை உடைய 111 நிறுவனங்களுடன் மூன்றாவது வரிசையில் உள்ளது.
இந்த அறிக்கை கிரெடிட் சுய்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
2018 கிரெடிட் சுய்சி 1000 குடும்பங்கள் என்ற அறிக்கையின்படி 159 நிறுவனங்களைக்கொண்ட சீனாவிற்கும், 121 நிறுவனங்களைக் கொண்ட அமெரிக்காவிற்கும் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஜப்பான் தவிர்த்த ஆசியப் பிராந்தியத்தில் குடும்ப நிறுவனங்களை கொண்டிருக்கும் எண்ணிக்கையில் சீனா, இந்தியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
அந்நிறுவனத்தின் ஜப்பானைத் தவிர்த்த ஆசியப் பிராந்தியத்திற்கான தரவு தளத்தில் இந்த மூன்று பரப்பெல்லைகளும் ஒட்டுமொத்த அளவில் 65% சதவிகிதத்தைக் கொண்டுள்ளன.