TNPSC Thervupettagam

கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம்

April 29 , 2024 212 days 266 0
  • ‘கிரேட் நிக்கோபார் தீவின் முழுமையான மேம்பாடு’ என்ற தலைப்பிலான மாபெரும் உள்கட்டமைப்பு திட்டம் ஆனது, நிதி ஆயோக் அமைப்பினால் தயாரிக்கப்பட்டு, போர்ட் பிளேயரில் அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தினால் (ANIIDCO) செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இது ஒரு கப்பல் போக்குவரத்து துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு நகரக் கட்டமைப்பு மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றினைக் கொண்ட உள்கட்டமைப்பின் கட்டுமானச் செயல்முறையினை உள்ளடக்கியது.
  • இத்திட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகவும், பழங்குடியினரின் கருத்துகளை புறக்கணிப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
  • இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டப் பாதிக்கும் மேலான பகுதியானது பழங்குடியினர் வாழ்கின்ற பகுதியில் அமைந்துள்ளது.
  • கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள ஷோம்பென் மற்றும் நிக்கோபரீஸ் உள்ளிட்ட தீவுகளில் ஆறு பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • சுமார் 200-300 மக்கள் தொகையினை கொண்ட ஷோம்பென் இனத்தினர் ஒரு வேட்டையாடி வாழும் சமூகத்தினர் ஆவர்.
  • நிக்கோபாரீஸ் என்பது நிக்கோபார் தீவுகள் முழுவதும் பரவி வாழ்கின்ற சுமார் 27,000 மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய பழங்குடியினர் குழுவாகும்.
  • கிரேட் நிக்கோபார் தீவில் 751.01 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பழங்குடியினர் வாழ்விடம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்