பங்குபெற்ற அனைத்து மாவட்டங்களிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டமானது அதிக எண்ணிக்கையிலான பறவைகளின் பட்டியலை (8420) கிரேட் பேக்யாடு (புழக்கடை) பறவைக் கணக்கெடுப்பு (GBBC - Great Backyard Bird Count) 2019ற்கு சமர்ப்பித்துள்ளது.
GBBC என்பது பறவை இனங்களின் நிகழ் நேரப் புகைப்படத்தை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்வாகும்.
பங்கேற்பாளர்கள் 4 நாட்கள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியின் அனைத்து நாட்களிலும் அல்லது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு 15 நிமிடங்களிலும் பறவைகளைக் கணக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் கணக்கெடுத்த எண்ணிக்கையை birdcount.org என்ற ஆன்லைன் இணையதளத்தில் தெரிவிக்கிறார்கள்.
இது கார்னெல் பறவையியல் ஆய்வகம் மற்றும் தேசிய அடுபோன் (Audubon) சமூகத்தினால் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
GBBC என்பது காடுகளில் வாழும் பறவைகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து நிகழ் நேரத்தில் முடிவுகளைக் காண்பிக்கும் முதலாவது நிகழ்நேர குடிமக்கள் அறிவியல் திட்டமாகும்.
22-வது வருடாந்திர GBBC ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 18 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.