16 வயது நிரம்பிய ஸ்வீடனைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் என்பவர் “அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் 2019 ஆம் ஆண்டிற்கான மனச் சாட்சியின் தூதர்” என்ற விருதை வென்றுள்ளார்.
உலகளாவிய வெப்பமயமாதல் காரணமாக எதிர்நோக்கியுள்ள அபாயம் குறித்து உலக மக்களின் கருத்துக்களை அணி திரட்டியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய “எதிர்காலத்திற்காக வெள்ளிக் கிழமைகள்” என்ற இயக்கமானது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் பருவ நிலை குறித்துப் போராடுவதற்காக வெள்ளிக் கிழமைகளில் விடுமுறை எடுப்பது குறித்த ஒரு இயக்கமாகும்.
இந்த விருதைப் பற்றி
அம்நெஸ்டியின் இந்த விருது 2002 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது மனச் சாட்சியின்படி தமது நடவடிக்கைகள் மற்றும் அநீதிகளை எதிர்கொள்தல் ஆகியவற்றின் மூலம் மனித உரிமைகளை காத்தல் மற்றும் தமது திறமைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை ஈர்த்தல் ஆகியவற்றில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை அங்கீகரிக்கின்றது.