ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியதையடுத்து கிரையோ (CRIIO) என்ற ஒரு பிரச்சாரத்தை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் துவங்கியுள்ளது.
கிரையோ என்பது ஒவ்வொருவரும் அவரவர் இருக்கும் இடத்தில் அவரவர் வழியில் கிரிக்கெட் விளையாடுவதைக் கொண்டாடுகிறது. உலகக் கிரிக்கெட் அவர்களை கிரையோ என்ற பிரச்சாரத்தின் கீழ் ஓரினமாகக் கருதுகிறது.