தற்போதுள்ள எடை, மின்னோட்டம், வெப்பநிலை மற்றும் சில வேதியியல் பொருட்களின் சர்வதேச அமைப்பின் அலகுகளை (SI - International System of Units) மீளமைப்பதற்காக 60 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர்.
அனைத்து SI அலகுகளும் இயற்கையான உலகத்தை விவரிக்கும் நிலையான மாறிலிகளின் அடிப்படையில் தற்போது வரையறுக்கப்படும்.
இது அளவீட்டு அலகுகளை வரையறுக்க திடப் பொருட்களை பயன்படுத்தும் முறையை முடிவுக்கு கொண்டு வரும்.
இந்த புதிய வரையறைகள் SI அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் கீழ்க்காணும் 4 அலகுகளில் மாற்றத்தைக் கொண்டு வரும்.
கிலோகிராம், ஆம்பியர், கெல்வின் மற்றும் மோல்.
SI அமைப்பில் இருந்து பெறப்படும் வோல்ட் (V), ஓம் (Ω) மற்றும் ஜூல் (J) போன்ற அனைத்து அலகுகள்.
கிலோகிராம் வரையறையானது தற்போது குவாண்டம் இயற்பியலின் அடிப்படை மாறிலியான பிளாங்க் மாறிலி மூலம் மாற்றியமைக்கப்படும்.
இதுவரை கிலோகிராமானது பாரிஸின் புறநகரில் பாதுகாக்கப்பட்ட பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள கிராண்ட் கே (Grand K) என்றழைக்கப்படும் பிளாட்டினம் - இரிடியம் கட்டியின் நிறையால் வரையறுக்கப்பட்டு வருகிறது.
1889 ஆம் ஆண்டு முதல் உலகின் உண்மையான ஒரு கிலோ என இதனை அடிப்படையாகக் கொண்டே மற்ற அனைத்தும் அளவிடப்பட்டு வருகின்றன.
இந்த முடிவானது பிரான்சின் வெர்சைல்ஸ் நகரில் எடைகள் மற்றும் அளவீடுகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த பொது மாநாட்டில் எடுக்கப்பட்டது.