TNPSC Thervupettagam

கில்காரி திட்டம்

February 15 , 2024 156 days 344 0
  • கில்காரி திட்டம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளூர் பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்காகச் சமீபத்தில் தொடங்கப்பட்ட கைபேசி சுகாதார நலச் சேவை (m-health) முன்னெடுப்பு ஆகும்.
  • ‘கில்காரி’ (‘குழந்தையின் ஓசை’ என்று பொருள்) என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட இரு வழித் தொடர்பிலான குரல்வழி செய்திகளை (IVR) வழங்கும் வகையிலான கைபேசி சுகாதார நலச் சேவையாகும்.
  • இது பயனாளிகளின் கைபேசிகளை கர்ப்பம், பிரசவம், குழந்தைப் பராமரிப்பு பற்றிய இலவச, வாராந்திர, நேரத்திற்குத் தகுந்த 72 ஒலி/ஒளி சார் செய்திகளை வழங்குகிறது.
  • தற்போது கில்காரி திட்டம் 18 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்