ரைசோடினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய வகை வண்டு இனங்களை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தப் புதிய இனமானது, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள டாலே பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வண்டுகள் பற்றிய முதன்மை ஆய்வாளர் (கோலியோப்டெராலஜிஸ்ட்) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முன்னாள் அறிவியலாளர் மறைந்த டாக்டர் லலிதா ரே சௌத்ரிக்குக் கௌரவமளிக்கும் வகையில் இதற்கு 'கிளினிடியம் லலிடே' என்று பெயரிடப்பட்டுள்ளது.