TNPSC Thervupettagam

கிளைபோசேட்டு மருந்துகளுக்கு தடை – தெலுங்கானா

May 10 , 2021 1204 days 604 0
  • தெலுங்கானா மாநில அரசானது சமீபத்தில் கிளைபோசேட்டின் பயன்பாட்டிற்குத் தடை வித்துள்ளது.
  • கிளைபோசேட்டு என்பது பருத்தி பயிரிடப்படும் நிலங்களில்  வளரும் களைகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சர்ச்சைக்குரிய களைக் கொல்லியாகும்.
  • புற்றுநோயை உண்டாக்கக் கூடியது என்பதால் கிளைபோசேட்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • மேலும் HTBt பருத்தியை சட்டவிரோதமான முறையில் பயிரிடுவதைத் தடுப்பதற்காகவும் இதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • கிளைபோசேட்டு மருந்தானது இலைகளின் மூலம் உறிஞ்சப் படுகின்றன.
  • இவை வேர்களால் குறைந்த அளவிலேயே உறிஞ்சப் படுகின்றன.
  • 2015 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது கிளைபோசேட்டு மருந்துகளை “மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கக் கூடும் மருந்துகள்” எனும் 2A பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்