நீர் வள ஆதாரங்கள் (Water Resources) மீதான கிழக்கத்திய மாநிலங்களின் முதல் பிராந்திய மாநாடு அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் நடைபெற்றது.
முக்கியமான நீர் வள ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை களைவதற்கான ஓர் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய நீர் வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் (Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation) இந்த மாநாட்டினை நடத்தியுள்ளது.
பீஹார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து கிழக்கத்திய மாநிலங்களுக்கு இடையேயான முக்கியமான நீர்வள ஆதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் (water resources issues), மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகள் (inter-state issues), மாநிலத்திற்குள்ளான மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வடிகால் பிரச்சினைகள் (Intra and Inter-basin issues) ஆகியவற்றை களைவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.