கிழக்கிந்தியாவின் முதல் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம்
December 19 , 2017 2678 days 966 0
கிழக்கிந்தியாவின் முதல் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை பிரதான் மந்திரி உர்ஜா கங்கா என்ற திட்டத்தின் கீழ் புவனேஸ்வர் நகரில் சந்திரசேகர்பூர் மற்றும் பாட்டியா என்ற இடங்களில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவங்கி வைத்தார்.
இந்த சேவை அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு பரிமாற்ற நிறுவனமான கெயில் நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் நகர வாயு பகிர்மானத் திட்டத்தின் கீழ்வரும் முயற்சியாகும்.
இந்த நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவிலிருந்து சாலை வழியாக அடுக்கைகள் ('cascades') எனப்படும் சிறப்பு கொள்கலன்கள் மூலம் புவனேஸ்வருக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு வரும்.
பின்னர் இது, பிரதான் மந்திரி உர்ஜா கங்கா என்று அறியப்படும் திட்டமான 2655 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் பொகாரோ-தம்ரா இயற்கை எரிவாயு குழாய்களின் வழியே விநியோகிக்கப்படும்.