TNPSC Thervupettagam

கிழக்கு ஆசிய மைய ஆய்வகக் கூட்டமைப்பு

January 24 , 2020 1769 days 627 0
  • பெரிய தொலைநோக்கிகளைக் கட்டமைப்பதற்காக உறுதி பூண்டுள்ள எட்டு நாடுகளைக் கொண்ட கிழக்கு ஆசிய மைய ஆய்வகக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இணைய இந்தியாவானது தொடக்க நிலை விவாதங்களில் ஈடுபட்டுள்ளது.
  • ஹவாயில் நடைபெற இருக்கும் மௌனாகியா உச்சி மாநாட்டில் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் சப்மில்லிமீட்டர் தொலைநோக்கியின் (James Clerk Maxwell Submillimetre Telescope - JCMT) செயல்பாட்டை ஏற்றுக் கொள்வதே இதன் முதல் பணியாகும்.
  • இது சீனா, ஜப்பான், தைவான், கொரியா ஆகிய நாடுகளை முழு உறுப்பினர் நாடுகளாகவும் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றைப் பார்வையாளர் நாடுகளாகவும் கொண்டுள்ளது.
  • இந்தக் குழுவில் இந்தியா சேர்வது என்பது புதிய கருந்துளைகளைக் கண்காணிப்பதற்காகவும் அண்ட நிகழ்வுகளில் கவனத்தைச் செலுத்துவதற்காகவும் உதவக் கூடிய வகையில் திபெத்தில் முன்மொழியப் பட்ட தொலைநோக்கி உள்ளிட்ட புது வகையான தொலைநோக்கிகள் நிறுவுவதைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்