இந்தியப் பிரதமர், மொரீஷியஸ் நாட்டில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தோரின் பெரும் பாரம்பரிய பீஹாரி வரவேற்பைப் பெற்றார்.
அந்தப் பெண்கள் கீத் கவாய் எனப்படும் பீஹாரி கலாச்சார நிகழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்.
கீத் கவைன் என்பது இந்தியாவின் போஜ்புரி என்ற பகுதியைச் சேர்ந்த பெண்களால் மொரீஷியஸுக்குக் கொண்டு வரப்பட்ட, மிக வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய போஜ்புரி இசைக் குழுவாகும்.
இது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யுனெஸ்கோ அமைப்பின் மனிதகுலத்தின் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் பதிவுப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.
2 நாட்கள் அளவிலான இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இன்டியன் ஓசன் எனும் விருதைப் பெற்றார்.