38-வது கீபீ குத்துச் சண்டைப் போட்டியானது பின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்றது.
இப்போட்டியை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நிறைவு செய்தது.
இந்தியாவைச் சேர்ந்த கவீந்தர் சிங் பிஸ்த் என்பவர் தனது இணைப் போட்டியாளரான இந்தியாவைச் சேர்ந்த முகமது குசாமுதின் என்பவரை வீழ்த்தி இந்தியாவிற்கு ஒரே ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.