சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்வின்போது தந்தத்தில் ஆன சீப்பு கிடைத்தது.
பின்னர், 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் தங்கக் கம்மல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 எழுத்துக்கள்(தமிழி) அடங்கிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பானையில் முட்கள் கொண்டு எழுதியிருக்கலாம்.
இதற்கு முன்பு ஆதன், உதிரன் என்ற பெயர் கொண்ட ஓடுகள் கிடைத்தன.
அதிகபட்சமாக வரிவடிவ எழுத்துகள் 7 அடங்கிய பானை ஓடு கிடைத்த நிலையில் 13 எழுத்துக்கள் கொண்ட இந்த ஓட்டால் கல்வியறிவு மிக்க மக்கள் இங்கு வாழ்ந்ததற்குச் சான்றாகக் கருதப்படுகிறது.
மேலும் கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப் பட்டு உள்ளது
இந்த பானை கிடைத்த குழியில் மேலும் ஐந்து பானைகள் கிடைத்துள்ளன.